Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டுக்கு போக முடியல..! சுவிட்சர்லாந்த்தில் சிக்கிய பெண்… கைது செய்த காவல்துறையினரால் பரபரப்பு..!!

சுவிட்சர்லாந்தில் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த பிரேசிலிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது சகோதரி Caty மற்றும் தாயாரை சந்திப்பதற்காக 36 வயதான Brenda தனது 9 வயது மகளுடன் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் பிப்ரவரி மாதத்தில் தனது சுற்றுலா விசா காலாவதியாவதற்கு முன்பாக ரியோ டி ஜெனிரோவுக்கு திரும்பி செல்ல நினைத்த போது, விமான சேவைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தாகும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து அவர் சுவிட்சர்லாந்திலேயே தங்கும் நிலைக்கு ஆளானார். ஆனாலும் விசா பிரச்சனை உள்ளதால் அவர் நாடு திரும்புவதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக தகவல் கேட்டு தெரிந்து கொள்வதற்காக சூரிச் குடிவரவு அலுவலகத்திற்கு சகோதரிகள் இருவரும் புதன்கிழமை அன்று சென்றுள்ளனர். ஆனால் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த அலுவலர்கள் அவர்கள் இருவரிடமும் மிக மோசமாக நடந்து கொண்டதோடு, Brenda சுவிட்சர்லாந்த்தில் சட்டவிரோதமாக தங்கி தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இதனையடுத்து Brenda வெள்ளிக்கிழமையன்று நாடு திரும்புவதற்காக விமான டிக்கெட் முன் பதிவு செய்துள்ளதை காவல் துறையினரின் முன்பு சமர்ப்பித்த பின்னரே இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் சூரிச் குடிவரவு அலுவலகத்திலிருந்து Brenda மீது புகார் அளிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு முதல் ஐந்து வருடங்கள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரேசிலுக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து நேரடியாக செல்வதற்கான பொருளாதாரநிலை அவர்களிடம் இல்லை என்பதால் Brenda போர்த்துக்கல் வழியாக பிரேசில் செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது இதுகுறித்து புகார் அளித்த சூரிச் குடிவரவு அலுவலகம் மீதும், பிரேசிலிய பெண்ணை கைது செய்த காவல்துறையினர் மீதும் கடும் விவாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |