காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். முன்னோர்கள் கூறிய மருத்துவங்களில் இதுவும் ஒன்று. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கும்பொழுது இடுப்புப் பகுதிக்கு இருந்து மேலே அதிகமாக ரத்த ஓட்டம் செல்கிறது. அந்த சமயத்தில் இடுப்புக்கு கீழே உள்ள பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து காணப்படும். அதனால் உடலின் மிக முக்கிய உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் இருப்பதால் அந்த பகுதிக்கு இரத்தம் சென்று நமக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க செய்கிறது.
அதனால் தான் சாப்பிடும் பொழுது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள். ஏனென்றால் இடுப்புக்கு கீழே பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் சென்று நம்முடைய உறுப்புகள் இயங்கு திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஜீரணமும் நன்றாக நடைபெற உதவுகிறது. எனவே இனிமேல் கீழே அமர்ந்து சாப்பிட பழகுங்கள்.