சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மூதாட்டி எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா (62) என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவரும் முத்துமாரியம்மன் கோவிலினுள் கண்மலர் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பத்மாவுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பத்மா எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பத்மாவின் மகன் பாலமுருகன் இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.