கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், கோவிட்ஷில்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் திடீரென இருமடங்காக உயர்த்தி அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிட்ஷில்டு மருந்துக்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இனி மாநில அரசுக்களுக்கு 400ரூபாய்க்கு வழங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே போன்ற தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி 600 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தடுப்பூசி சில்லறையில் விற்கப்படும் என என கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு அறிவித்தபடியே தங்களது உற்பத்தியில் 50% மட்டுமே மாநில அரசுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 50 சதவிகித தடுப்பூசி மத்திய அரசுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது.
இதனிடையே தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளதற்கு மருத்துவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.