Categories
விளையாட்டு

கொரோனா  விதிமுறையை பின்பற்றுமாறு …மக்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் …!!!

கொரோனா   விதிமுறைகளை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று ,விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோன தொற்றின்  2வது அலை, வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  2.94 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மக்கள் அனைவரும் கொரோனா  விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் ,என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த ஆண்டைவிட தற்போது கொரோனா வைரஸ் வேகம் எடுக்க  தொடங்கி உள்ளதாக கூறினார். இதனால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி ,முகக் கவசம் அணிதல் அவசியமானதாகும். அதோடு பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும் ,கைகளை சானிடைசர்  கொண்டு ,சுத்தம் செய்ய வேண்டுமென்று மக்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் விடுத்தார் .

Categories

Tech |