கொரோனா இரண்டாவது அலையால் புனித நீராட தடை விதிக்கப்பட்டு, திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் பக்தர்கள் புனித நீராட நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டது.
கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்லாமல் இருக்க….. தடுப்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை பகுதி பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. காலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவில் வளாகத்தில் பக்தர்கள் இளைப்பாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .