புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்மாற்றியத்தை சரி செய்து தரக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விஜயரெகுநாத பட்டியில் மின்மாற்றி கடந்த 20 நாட்களுக்கு முன்பே பழுதாகி விட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஆழ்துளைக் கிணற்றின் மூலம் விவசயிகள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மின்சாரம் இல்லாததால் பயிர்கள் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாச்சிக் கோட்டையிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து செயற்பொறியாளர் சுப்பிரமணியன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் மாற்றத்தை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்பு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.