Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் பதுங்கிய கட்டுவிரியன் பாம்புகள் – அலேக்காக தூக்கிய தீயணைப்பு வீரர்கள் …!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டுக்குள் இருந்த மூன்று கட்டு வெறியின் பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள கவனம்பட்டி கிராமத்தில் போக்குவரத்து தலைமை காவலர் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்குள் பாம்பு இருப்பதாக தகவல் அளித்ததையடுத்து அங்கு தீயணைப்பு விரைந்து சென்றனர். பல மணி நேரம் போராட்டத்திற்குப்பிறகு அந்த வீட்டிற்குள் அதிக விஷத்தன்மை வாய்ந்த மூன்று கட்டுவிரியன் பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டன, மீட்கப்பட்ட மூன்று பாம்புகளும் உசிலம்பட்டி வன காவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Categories

Tech |