குளச்சல் அருகே தொடர்ந்து நகைபறிப்பு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து வந்ததுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் லட்சுமிபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் முரண்பாடாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரித்தபோது அவர்கள் மேக்காமண்டபத்தை சார்ந்த அபிராம் மற்றும் பரம்பை கிராமத்தை சார்ந்த கிருஷ்ணகுமார் என்று தெரியவந்தது. இவர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் வீடுகளில் புகுந்து நகை திருடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 14 1/2 பவுன் திருடப்பட்ட நகைகள் மற்றும் ரூபாய் 77 ஆயிரம் பணத்தை காவல் துறையினர் மீட்டனர்.