பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படிக்காத ஒரு சாதாரண குடும்பப் பெண்ணின் கஷ்டங்களை வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தங்களது வாழ்க்கையில் நடக்கும் சில பிரச்சினைகள் இந்த சீரியலில் இருப்பதால் மக்கள் இந்த சீரியலோடு ஒன்றி விட்டார்கள்.
மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில் இந்த சீரியலின் படப்பிடிப்பில் பாக்கியலட்சுமி சீரியல் தயாரிப்பாளரின் பிறந்தநாளை அனைவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.