Categories
Uncategorized தேசிய செய்திகள்

அனைவருக்கும் தடுப்பூசி போடும் செலவை…. மாநில அரசே ஏற்கும்…. அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு அரசு மருத்துவமனையில் ரூபாய் 400, தனியார் மருத்துவமனையில் ரூபாய் 600 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தீஷ்கரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக செலவுகளை மாநில அரசே ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார். எங்கள் குடிமக்களின் உயிரை பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் கிடைப்பதே மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |