தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பன்பக்கெட் பார்கவ் என்ற டிக் டாக் பிரபலம் 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அதனை பயன்படுத்திக் கொண்ட அவர், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளது அவரது குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிக் டாக் பிரபலம் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.