நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கே கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
மேலும் வெளியூருக்கு செல்லும் அரசு பேருந்துகள் முன்னதாகவே நிறுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதா என்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஆய்வு செய்துள்ளனர்.