மும்பை இந்தியன்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வரும், டி காக் தொடர்ந்து போட்டிகளில் சொதப்பி வருவது ,ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு எதிரான போட்டி, சென்னையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . மும்பை இந்தியன்ஸின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ,கேப்டன் ரோகித் சர்மா – டி காக் களமிறங்கினர். கடந்த சீசனில் நடைபெற்ற போட்டியில், டி காக் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த சீசனில் நடைபெற்ற பல போட்டிகளில், மும்பை அணி வெற்றி பெற டி காக் பக்கபலமாக இருந்தார். இதன் காரணமாக அவர் ,இந்த சீசனிலும் ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கியுள்ளார்.
ஆனால் இதற்கு முன் கிறிஸ் லின், மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது டி காக் வந்தபிறகு ,கிறிஸ் லின் நன்றாக விளையாடியும் ,அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த சீசனில் நடைபெற்ற போட்டிகளில் ,டி காக் சொதப்பி வருகிறார். இதனால் 20 ரன்களை கூட எடுக்கமுடியாமல் , டி காக் சொதப்பி வருவது மும்பை அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டி காக் சென்னைப் பிட்சிற்கு ஏற்றவாறு ,விளையாட முடியவில்லை. நேற்று நடந்த போட்டியில் இவர் 1 ரன் மட்டுமே எடுத்து ,அவுட் ஆனது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இனி வரும் போட்டியில், இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா , என்ற கேள்வியும் எழுந்துள்ளது.