Categories
உலக செய்திகள்

கருப்பின சிறுமியை சுட்டுக்கொன்ற அதிகாரி.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் இருக்கும் கொலம்பஸ் நகரில் Makiyah Bryan என்ற 15 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அமெரிக்க மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொலம்பஸ்ஸின் காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதாவது சிறுமியை சுட்ட காவலரின் உடலில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவான கட்சியை தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் படி, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற போது சிலர் தங்களுக்குள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிகாரிகள்  சண்டையை நிறுத்துங்கள் என்று பலமுறை கேட்டுள்ளனர்.

ஆனால் Makiyah Bryan என்ற சிறுமி ஒரு பெண்ணை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். இதனை தடுப்பதற்காகவே, காவல்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட நேர்ந்தது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் அத்தை Hazel Bryant கூறியுள்ளதாவது, Makiyah வீட்டிற்கு சில பெண்கள் கூட்டமாக வந்து சண்டையில் ஈடுபட்டனர். அப்போது Makiyah தான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தற்காப்புக்காக சிறுமி கத்தி வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைதுறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |