Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கண்டிப்பா உயர்த்தணும்… வேலை செய்ய மாட்டோம்….. கோஷமிட்டு முழங்கிய ஊழியர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உருக்காலை தொழிற்சங்க ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள உருக்காலை தொழிற்சங்கங்களின் சார்பில் தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களின் முன்னேற்ற சங்க பொது செயலாளர் பெருமாள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்துள்ளார்.

போராட்டத்தின் போது தொழிலாளர்கள் புதிய சம்பள விகிதத்தை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |