தென்காசியில் 5மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் பகுதியில் ஆறுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடையை மனைவி காயத்ரி என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான காயத்ரி வயிறு, நெஞ்சு மற்றும் கால் வலிகளால் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருடைய வலிகள் குணமடையாதால், மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் காயத்ரி தலைமுடிக்கு பூசப்படும் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் வீட்டிற்கு வந்த ஆறுசாமி தனது மனைவி கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து காயத்ரியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு காயத்ரியை பரிசோதித்த பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயத்ரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் 5 மாத கர்ப்பிணியான காயத்ரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.