புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி தாங்கள் தங்கியுள்ள இடத்திலேயே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்திலேயே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தொழிலாளர்களுக்கு விரைவிலேயே தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளில் குழு அமைத்து தடுப்பூசி போடப்படும் பணியை விரைவுபடுத்தும் என தெரிவித்துள்ளார்.