Categories
தேசிய செய்திகள்

Breaking: சனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு… வெளியான அறிவிப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இதைத்தொடர்ந்து முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து முழு ஊரடங்கு இல்லாத நாட்களில் பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.

Categories

Tech |