Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க போய் படுத்துக்கலாம்…! 200தொகுதி ஜெயிப்போம்…. தப்பு செஞ்சா பிடிப்போம் …!!

வாக்கு என்னும் மையத்தில் யாரேனும் தவறு செய்ய முற்பட்டால் எங்களிடம் பிடிபடுவார்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரியிடம்,  10மணியில் இருந்து 4மணி வரை  இரவு நேர ஊரடங்கு தமிழக அரசு போட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அரசியல் கட்சிகள் செல்வதற்கு தடை இருக்கா ? என்ற கேள்விக்கு 10மணியில் இருந்து 4மணி வரைக்கும்  நடமாட்டம் தான் இருக்க கூடாது. அங்க போய் படுத்துக்கலாம்,

9மணிக்கே போய் அங்க போய் பாய், தலையணை போட்டு படுத்துக்கலாம், அங்க போய் யாரையும் எழுப்ப முடியாது. 200தொகுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுடைய கூட்டணி தோழர்கள் எச்சரிக்கையோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கின்றார்கள். யாரேனும் தவறு செய்ய முற்பட்டால் எங்களிடம் பிடிபடுவார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |