அபுதாபியில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அபுதாபியில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அபுதாபி பொது சுகாதார மையம், அபுதாபி நீதித்துறை, அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை ஆகியவைகள் இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
மேலும் இது குறித்து சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசனி “மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் குழந்தைகளை கூட்டிச் செல்லும்போது அவர்கள் சரியாக முகக்கவசம் அணியாததால் அவர்களுக்கு மிக வேகமாக கொரோனா தொற்று ஏற்படுவதாகவும் இதனால் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆகையால் அமீரகத்தில் 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது. இந்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் விளையாட்டு மைதானங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்றும் அறிவித்துள்ளனர்.
எனவே குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு வராது என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் கைவிட வேண்டும். மேலும் குழந்தைகளை அடிக்கடி சனிடைசர் மற்றும் கிருமிநாசினிகள் கொண்டு கைகளை கழுவுமாறு வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
.