Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு அமல்படுத்த முடியாது…. உத்தரபிரதேச அரசு மேல்முறையீடு..!!

உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்த முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஐந்து நகரங்களில் ஊரடங்கு அமல் படுத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உத்திரப்பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வாரணாசி, லக்னோ, கோரக்பூர், பிரயாக்ராஜ், கான்பூரில் ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்திரப்பிரதேச அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Categories

Tech |