காஷ்மீர் சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததையடுத்து சில இடங்களில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அமைதி நிலவுகிறது.
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இரத்து செய்து அந்த மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3-ஆவது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மாநிலம் முழுவதும் செல்போன் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.இராணுவ வீரர்கள் கடந்த 4 நாட்களாகவே சேட்லைட் போன் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் காஷ்மீர் சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததும் அங்கே வன்முறை சம்பவம் நிகழும் என்று மாத்திரை அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது வரை அங்கே பெரிய அளவில் வன்முறை சம்பவம் ஏற்படவில்லை.
அங்குள்ள பூஞ்ச் மாவட்டம் பஃப்லியஸ் பகுதியில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.இதில்போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370-வது ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்கில் டவுனில் முழு அடைப்பு நடைபெற்றது. மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சந்தேகத்தின் பேரில் 100-க்கும் அதிகமானோரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.