பிரபல நடிகை நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான நய்யாண்டி, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. இப்படி பிரபல நடிகையாக வலம் வந்து இவர் திடீரென கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். இதை தொடர்ந்து சினிமா பக்கம் எட்டிப் பார்க்காது இருந்து நஸ்ரியா கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், நடிகை நஸ்ரியா அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல நடிகர் நானி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அன்டி சுந்தரினிகி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் நஸ்ரியா நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பதால் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இது எனது முதல் தெலுங்கு படம். முதலாவது எப்போதுமே சிறப்பு என்று பதிவிட்டுள்ளார்.
It was a great start for my first telugu Film ♥️🤩 First is always special.
Ante Sundaraniki will be special ❤️🔥 #AnteSundaraniki
— Nazriya Nazim Fahadh (@Nazriya4U_) April 19, 2021