சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
அதுமட்டுமன்றி மக்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து எப்படி தப்பிக்க போகிறோம் என்ற அச்சத்தில் நடுநடுங்கி உள்ளனர். தடுப்பு மருந்து உள்ளிட்ட பலவற்றை அனைத்து நாடுகளும் தயாரித்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் சூடான நீருடன் உப்புக் கலந்து வாய் கொப்பளிக்கும் போது சளியை நெகிழச் செய்து தொண்டைப் புண்ணில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. பாக்டீரியா, வைரஸ்கள் உங்கள் தொண்டையில் தங்கி வலி ஏற்படுத்தும். உப்பு நீரில் உள்ள சோடியம் அதிக அடர்த்தியில் இருப்பதால் அடர்த்தி குறைந்த திசு சவ்வுகளின் வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அளிக்கிறது. இதனால் சளி உருவாகாமல் தொண்டைப் புண் குணமாகிவிடும்.