நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகில் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இவர் இந்த படத்தின் மூலம் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் . நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் ஹிந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விதவிதமான ரியாக்சன்கள் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்ட ராஷ்மிகா ‘இதில் எந்த மனநிலை வேண்டும்?’ என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு 31 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.