சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஆரஞ்ச் பர்க் கவுண்டி பகுதியில் மைக்கேல் பிளேட் ஹோவர் என்ற இளைஞன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுமி மீது ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக போலீசார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாதுகாப்பிற்காக அந்த இளைஞனை நம்பி இருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கையை உடைத்து இளைஞன் மோசமான வழியில் ஈடுபட காரணமாக இருந்திருக்கிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் இளைஞன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.