நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ,கொல்கத்தா அணியின் கேப்டனான மோர்கனை, கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார் .
நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆர்சிபி அணி 204 ரன்களை குவித்தது .பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 166 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.இதனால் ஆர்சிபி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அதில் நேற்றைய கொல்கத்தா அணியின் கேப்டன்சி மிகவும் மோசமாக காணப்பட்டதாக ,அவர் விமர்சித்துள்ளார். குறிப்பாக போட்டியில் பவுலிங் செய்த கொல்கத்தா அணி வீரரான வருண் சக்ரவர்த்தி, பந்து வீசிய ஒரே ஓவரில் கோலி மற்றும் படித்தார் இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆனால் வருணுக்கு 4வது ஓவர் கொடுக்காமல் ,கேப்டன் மோர்கன் ஷகிப் அல் ஹசனிடம் கொடுத்துள்ளார். இதுபற்றி கூறிய கௌதம் கம்பீர் ,’என்னுடைய வாழ்வில் இப்படி ஒரு மிக மோசமான கேப்டன்சியை நான் பார்த்ததில்லை ‘.என்று கொல்கத்தா அணி கேப்டன் மோர்கனை விமர்சனம் செய்துள்ளார். 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வருணுக்கு, அடுத்த ஓவரில் வாய்ப்பு கொடுக்கவில்லை. அடுத்த ஓவரில் வருணுக்கு, வாய்ப்பு கொடுத்திருந்தால் , மேக்ஸ்வெலை கண்டிப்பாக வருண் வீழ்த்தியிருப்பார், என்று கம்பீர் கூறியுள்ளார். இதனால் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனை , கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.