Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘கைக்கு வந்த சான்ஸ கோட்டை விட்ட ரசல்’….! குழம்பிய கொல்கத்தா ரசிகர்கள்….வெளியான வீடியோ …!!!

நேற்று நடந்த 10வது லீக் போட்டியில்,38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ,  ஆர்சிபி  அணி அபார வெற்றி பெற்றது.

நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 204 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில்
166 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. குறிப்பாக டி வில்லியர்ஸ் , மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . நேற்றைய போட்டியில் இறுதிகட்டத்தில் டிவில்லியர்ஸ் -ஜேமிசன் இருவரும் பேட்டிங்கில் களமிறங்கியுள்ளன.

அப்போது கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரசல் கடைசி ஓவரில் வந்து வீசியுள்ளார். அப்போது அவர் வீசிய பந்தை டிவில்லியர்ஸ் அடிக்க ,அடுத்த பந்தானது ரசல் கைக்கு வந்துள்ளது. இந்நிலையில்  ரன் எடுப்பதற்காக கிரீஸை விட்டு ஓடியுள்ளார் .ஆனால் கைக்கு  கிடைத்த பந்தை வைத்து  ,ஜேமிசனை  ரன் அவுட் செய்யாமல்,ரசல் கோபத்துடன்  நடந்து சென்றார். இதனால் ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும், தவறவிட்ட ஆண்ட்ரே ரசலின்  வீடியோ மற்றும் புகைப்படங்கள்  நெட்டிசன்கள்   மத்தியில் வைரலாக பரவுகின்றது.

https://twitter.com/lodulalit001/status/1383761444739588100

Categories

Tech |