அமெரிக்காவில் ஓட்டுனர் இல்லாமல் பயன்படுத்திய டெஸ்லா கார் மரத்தில் மோதியதால் அதில் பயணித்த 2 பேர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டெஸ்லாவின் 2019 ‘மாடல் S’ காரில் இரண்டு பேர் ஓட்டுநர்கள் இல்லாமல் பயணித்துள்ளனர். அந்த கார் ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் தன்னிச்சையாக இயங்க கூடியது என்பதால் காரில் ஓட்டுநர் இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர் .
அதிவேகமாக houston க்கு வடக்கே சென்ற அந்த கார் நேவிகேஷனில் கோளாறு ஏற்பட்டதால் மரத்தில் மோதி தீ பிடித்துள்ளது. சம்பவ இடத்திலேயே காரில் இருந்த 2 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.