மாமல்லபுரத்தில் கொரோனாவின் பரவலை முன்னிட்டு கடற்கரை பகுதிகள் தடுப்புகள் மூலம் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதிலும் குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகமாக பரவுகிறது. இதனால் அரசாங்கம் சில குறிப்பிட்ட மாவட்டங்களிலிருக்கும் சுற்றுலா தலம், வழிபாட்டுத்தலம் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது.
இந்த நிலையில் பொதுமக்கள் கோடை விடுமுறை நாட்களை கழிப்பதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுர கடற்கரைக்கு சென்றுள்ளனர். அதனை மாமல்லபுரம் சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாந்து வீடு திரும்பியுள்ளனர்.