Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க விடக்கூடாது… ஏன் தெரியுமா..? அறிவியல் கூறும் காரணம் இதோ…!!

பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா ? அறிவியல் கூறும் காரணத்தை பற்றி நாம் இதில் பார்ப்போம்.

பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள்  உள்ளது.  ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளையும் போய் விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பால் கொதிக்க ஆரம்பித்த பிறகு வாயுவை குறைவாகி பாலை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.

அவ்வாறு செய்தால் பாலில் உள்ள நுண்ணுயிர்கள் அளிக்கப்படும் என்று குழந்தை பருவத்திலிருந்து நமக்கு கூறப்படுகிறது. பாலை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை அது இல்லை. நீண்ட நேரம் பாலை கொதிக்க வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதும் அழிக்கப்பட்டு விடுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அவ்வாறு கொதிக்க வைத்த பாலை நீங்கள் குடிப்பதால் உங்களுக்கு எந்த பலனும் கிடையாது எனவும் கூறுகின்றனர். ஒரு முறை பால் பொங்கியதும் அடுப்பை அணைப்பது சிறந்த வழி. இனியாவது பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டாம். ஒருமுறை கொதிக்க வைத்தாலே போதுமானது.

 நினைவில் கொள்ளுங்கள்:

நீங்கள் உணவு சாப்பிட்ட பின் பால் குடிக்கிறீர்கள் என்றால் அரை வயிற்றுக்கு மட்டும் உணவு சாப்பிட வேண்டும். ஏனெனில் செரிமான பிரச்சனை ஏற்படும்.

வெங்காயம் மற்றும் கத்திரிக்காய் உடன் ஒருபோதும் பால் உட்கொள்ள வேண்டாம். இவற்றில் உள்ள ரசாயனங்கள் பால் உடன் கலந்து தோல் நோய்களை ஏற்படுத்தும்.

மீன் அல்லது இறைச்சியுடன் பால் சேர்க்கக்கூடாது. சருமத்தில் வெள்ளை புள்ளிகள் போன்ற பிரச்சினை ஏற்படும்.

உணவு சாப்பிட்ட உடனே பால் குடிக்கக்கூடாது. உணவு ஜீரணம் ஆகாது.

Categories

Tech |