Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை… கோவில் நிர்வாகம் தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மேற்கு ரத வீதியில் சிறப்பு வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாக கலச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்து சிறப்பு பூஜை, கொடிப்படம், தீபாராதனை நடைபெற்றது. லட்சுமி நாராயண பெருமாள் கொடியேற்றத்தை காண சிறப்பு அலங்காரத்தில் சன்னதி வீதியில்எழுந்தருளினார். அதன் பின்னர் உள்பிரகாரத்தில் கொடிப்படம் சுற்றி கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வரும்போது அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முக கவசம் அணிதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |