Categories
மாநில செய்திகள்

கடைகள், தியேட்டர்கள், மால்களுக்கு தடை… அரசு அதிரடி உத்தரவு..!!

கடைகள் தியேட்டர்கள் மால்களுக்கு பொதுமக்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு என முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து ஞாயிறு முழு ஊரடங்கு அன்று இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்விகி, சொமோட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் காலை 6-10, 12-3, மாலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மின் வணிக நிறுவன சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை .

Categories

Tech |