இது ஒரு நீண்ட பயணம் என்றும், வயது ஆகி விட்டதாகவும் உணர்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
சென்னை அணிக்காக-200 ஆட்டங்களில் விளையாடியது குறித்து தோனி மனம் திறந்து பேசினார். இந்த மைல்கல் குறித்து எப்படி உணர்கிறீர்கள் ? என்று 39 வயதான தோனியிடம் கேட்டபோது, மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
இது ஒரு மிக நீண்ட பயணம் என்றும், கடந்த 2008ஆம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியதாகவும் குறிப்பிட்ட தோனி, 200 ஆவது போட்டியில் மும்பையில் விளையாடுவேன் என நினைக்கவில்லை என்றார். மேலும் தீபக் சஹர் சிறந்த பந்து வீச்சாளராக ஆகிவிட்டதாகவும், பிராவோவும் தேவையான நேரத்தில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தக் கூடியவர் என்பதில் எந்த ரகசியமும் இல்லை என்றும் தோனி தெரிவித்தார்.