நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள நதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான கயல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது நடிகை ஆனந்தி ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவண கூட்டம், டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் உள்ளிட்ட பல திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார் .
A rather interesting first look indeed. Can't wait to see what's in store!
Happy to be part of the launch initiative for the new movie #Nadhi. A huge shout out to the crew. pic.twitter.com/AGvZt616f8
— Rana Daggubati (@RanaDaggubati) April 18, 2021
மேலும் இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை கயல் ஆனந்தி பிரபல தொழிலதிபரும் அக்னி சிறகுகள் படத்தின் இணை இயக்குநருமான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள நதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.