Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா குளிச்சிட்டு இருந்தோம்… திடீரென தண்ணீரில் மூழ்கிய சிறுமி… கதறி அழுத தந்தை…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி சிறுமி உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காவனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மகள் இருந்தாள். இந்நிலையில் கோகிலா வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குளிப்பதற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த கோகிலா நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.  இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்  ஓடி  வந்து கோகிலாவை மீட்டுள்ளனர்.

ஆனால் அதற்குள் கோகிலா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் காவல் துறையினர் சிறுமியின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |