சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் எனக்கு தென்பட்டதால், உடனே பரிசோதனை செய்தேன். அதில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. தற்போது நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். விரைவில் இதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.