பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் இன்ஜினியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் அஜய் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அஜய் பாபு பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதில் நஷ்டம் அடைந்ததால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது வீட்டை விட்டு வெளியேறிய அஜய் பாபு கானத்தூர் ரெட்டி குப்பம் கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.