ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி சான்றிதழ் மூலம் தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருக்கும் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இதற்கு ஷோபனா என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதற்கு முன்பாக காவேரி பக்கத்திலிருக்கும் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தார். இதற்கிடையே இவருடைய கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிய அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் சான்றிதழ் போலியானது என்பதும், இது அரசு தேர்வுத் துறையின் மூலமாக அளிக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இதனால் அரக்கோணத்திலிருக்கும் வட்டார கல்வி அலுவலரான இந்திரா அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் ஷோபனா வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.