வாட்ஸ் அப் குழுக்களில் “பிங்க் வாட்ஸ்அப்” என்ற மிக ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது இவற்றை யாரும் கிளிக் செய்ய வேண்டாமென்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுக்களில் பிங்க் வாட்ஸ்அப் என்ற மிக ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது. பிங்க் லுக் வாட்ஸ்அப் என்று வரும் லிங்கை தொடவோ, திறக்கவோ, பார்வேர்ட் செய்யவோ வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் வங்கி கணக்கு, பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் திருடப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அதிகாரபூர்வ தளங்களிலிருந்து டவுன்லோடு செய்வதையே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.