Categories
சினிமா தமிழ் சினிமா

“கல்லூரி காலத்திலிருந்தே விவேக் என்னுடைய ரசிகன்”… விவேக்கிற்கு இளையராஜா இரங்கல்..!!

நடிகர் விவேக் மறைவிற்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.

அவரின் உடல் இல்லத்தில்  அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதை எடுத்து இவரின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவேக் மறைவிற்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே விவேக் என்னுடைய ரசிகராக இருந்தவர். சமீபத்தில் கூட என்னை வந்து சந்தித்த விவேக்கிடம் சில ஆலோசனை கூறினேன். விவேக் குடும்பமே என் மீது பாசம் வைத்துள்ளது. அந்த குடும்பம் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |