500 மரக்கன்றுகளை நட்டு விவேக் அவருக்கு அஞ்சலி தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
அவரின் உடல் இல்லத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதை எடுத்து இவரின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இயக்குனர், தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் என பன்முகங்கள் கொண்ட பி.டி செல்வகுமார் கன்னியாகுமாரியில் விவேக்கின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரின் நினைவாக 500 மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் சசி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.