ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசுவதற்கு பிரதமர் வந்துள்ளதாக பாஜகவினர் , கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் மக்களவையில் காலை முதல் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. சட்ட அமைச்சரான ரவிச்சந்திர பிரசாத் பேசிக்கொண்டிருந்த போது மக்களவைக்குள் பிரதமர் மோடி நுழைந்தார். அவர் நுழைந்ததும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் எழுந்து நின்று மேஜையை தட்டி கரகோஷம் எழுப்பினர். பிரதமர் உள்ளே அமர்ந்த பிறகும் அவருக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பினர்.
இதற்க்கு எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பிரதமர் வருகைக்கு ஏன் எதிர்க்கட்சிகள் எதிர்கிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தொடர்ந்து சபாநாயகரின் தலையீட்டை தொடர்ந்து அவை அமைதியானது.இந்த மசோதா மீது 6 மணிக்கு பிரதமர் மோடி பேசுவார் என தெரிகின்றது. மோடி அவைக்கு பேச வந்துள்ளது பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.