Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக்குடன் நடிக்க தவற விட்டேன்…. சிவகார்த்திகேயன் வருத்தம்….!!!

விவேக்குடன் நடிக்க தவறவிட்டதாக சிவகார்த்திகேயன் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4: 35 மணியளவில் உயிரிழந்தார். இவரது இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு பல திரைப் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சில பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, நாங்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைகிறோம். உங்களுடன் திரை படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் தவர விட்டேன். உங்களை எப்போதும் இழப்பேன் ஐயா. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |