Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இங்க போனவரு இத கொஞ்சம் பார்த்திருக்க கூடாதா…. கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சிபுரத்தில் மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் விசாரத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணிப்பேட்டையிலிருக்கும் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பாபு அவரது நண்பர்களுடன் சேர்ந்து முயல் வேட்டைக்காக சென்றார். இதற்கிடையே அப்பகுதியில் வேர்க்கடலையை எலிகள் மற்றும் பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால் மச்சேந்திரன் என்பவர் அங்கு மின் வேலியை அமைத்தார்.

இந்த நிலையில் முயல் வேட்டைக்கு சென்ற பாபு மின் வேலியை கவனிக்காமல் அதில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |