ஐரோப்பியாவில் நுழைவதற்காக மத்தியதரைக் கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் லம்பிடுசா தீவுக்கு செல்வதற்காக உள்நாட்டுப் போர் வறுமை பயங்கரவாதம் போன்ற காரணங்களால் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நேற்று கடலில் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் பகுதியை கடப்பதற்கான முயற்சி ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது அகதிகள் பயன்படுத்திய படகு மத்திய தரைக்கடல் பகுதியில் சென்றி கொண்டிருக்கும் போது திடீரென வேகமாக அலைகள் வீசியதால் படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. படகில் பயணித்த அனைத்து பயணிகளும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினர். இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த துனிசியா கடற்படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர் அதற்குள் படகு நீருக்குள் மூழ்கி அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 21 பேரின் உடலை மட்டுமே நீருக்கடியிலிருந்து மீட்க முடிந்தது எனவும் மற்றவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளார்கள் எனவும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் நுழைந்து விட வேண்டும் என்று சட்டவிரோதமாக மத்தியதரைக்கடல் பகுதியில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான அகதிகள் இதுபோன்ற உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.