Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதார தடை.. ரஷ்யாவின் தக்க பதிலடி..!!

அமெரிக்கா பொருளாதாரத்திற்கு தடை விதித்ததால் ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. 

அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா அமெரிக்க தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேற்றியதோடு, உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் 8 பேரை தடுப்பு பட்டியலில் வைத்திருக்கிறது. மேலும் ரஷ்யாவால் தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கும் நபர்களில் எப்.பி.ஐ இயக்குனர் மற்றும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் உள்ளனர்.

அதாவது கடந்த 2020ஆம் வருடம் அமெரிக்க தேர்தலில் தலையிட்டது, உக்ரைனை சீண்டியது, சைபர் தாக்குதல் நடத்தியது ஆகியவற்றிற்காக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததாக வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் ரஷ்யாவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் பொருளாதாரத்திற்கான தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அமெரிக்கா, கடந்த மாதத்தில் ரஷ்ய அதிகாரிகள் 7 பேர் உட்பட அரசுடன் தொடர்பில் இருந்த பல நபர்களை புடின் விமர்சகர் அலெக்ஸி நவாலினிக்கி விஷம் கொடுத்தது தொடர்பில் குறிவைத்துள்ளது.

எனினும் ரஷ்ய ஜனாதிபதி புடினிற்கு, ஜோ பைடன் உடன் சந்திப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் ரஷ்யா, ஜோ பைடனின் இந்த முடிவு வரவேற்கக்கூடியது, தகுந்த நேரத்தில் அதற்கான பதில் அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |