பாகிஸ்தானில் பிரான்சுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 4 போலீசார் உயிரிழந்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் வெளியிடப்படும் சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளைப் பற்றி கேலி சித்திரம் ஒன்று வெளியாகி சில வாரங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து பிரான்ஸ் நாட்டின் இம்மானுவேல் மேக்ரான் சார்லி ஹேப்டோ பத்திரிகை ஆதரவாகவும் கருத்து சுதந்திரத்திற்கு நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது சர்ச்சை தணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் – இ – லப்பைக் பாகிஸ்தான் என்ற தீவிர வலதுசாரி அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பிற்கு சாத் ரிஸ்வி தலைவராக உள்ளார்.
இந்த அமைப்பின் சார்பாக பாகிஸ்தான் நாட்டில் பிரான்ஸ்க்கு எதிராக போராட்டங்கள் தொடரப்பட்டது. முதலில் சுமுகமாக ஆரம்பித்த போராட்டங்களில் திடீரென வன்முறை கிளம்பியது. இவ்வன்முறையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடைகள் அலுவலகங்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்ட போது வன்முறைகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 4 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 600 பேர் படுகாயமடைந்தனர். ஆகையால் இந்த வன்முறை நாட்டின் பல பகுதிகளில் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ்தானில் நேற்று தொடர்ந்து 5 மணி நேரம் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டது .
அதாவது காலை 11 மணி முதல் 3 மணி வரை வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தடை செய்யபட்டன. பிறகு வன்முறை சுமுகமான நிலையில் மாலை 5 மணிக்கு மேல் தடை நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.