பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி மறைந்த விவேக்கின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பை காட்டி தனக்கென ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணி அளவில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திரை பிரபலங்கள் பலரும் விவேக்கின் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மூத்த காமெடி நடிகர் கவுண்டமணி விவேக்கின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளார். மேலும் பல பிரபலங்கள் ட்விட்டர் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.